Tuesday, August 3, 2010

குரு

குரு என்பவர் நடை முறையில் 
இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.
காரிய குரு, காரண குரு.
ஞானத்தை தேடுபவர்கள் 
வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களை 
விடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவை
சரண் அடைந்தால்
அந்த ஆன்மா குரு நமக்கு
உண்மை வழியை காட்டுவார்.
வாழ்வியலில் உள்ள குருக்களின் அனுபவங்கள்
மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்
உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பது
மிகப்பெரிய சவால்.
அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை குருவின் தன்மை
உலக விஷங்களை நாடாது.
அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.
ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேற
சரியான குரு சூக்கும நிலையில் உள்ள
ஆன்மா அறிவென்னும் குருவாகும்.
அதே போல் வாழ்வியல் குருக்களின் 
அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விட
நமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்று
நமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.
நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து
அவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்று
நம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம் சூக்குமம் ஆக உள்ள ஆன்மா அறிவின் துணை கொண்டு ஞான அனுபவத்தை பெற முயல்வோம்.

1 comment:

  1. காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.
    http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_01.html

    ReplyDelete